பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை தளபதி திரு ஆர்.ஹரிகுமார் தெற்கு கடற்படை கட்டளைக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 APR 2024 5:07PM by PIB Chennai

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் விரைவில் பணி ஓய்வு பெறவுள்ளார்.  இந்நிலையில் 2024 ஏப்ரல் 03 முதல் 06ம் தேதி வரை கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளைக்கு (எஸ்.என்.சி) அவர் பிரிவு உபச்சாரப் பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது, கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள சாகரிகா கலையரங்கத்தில் நடைபெற்ற 'கனெக்ட் வித் சிஎன்எஸ்' என்ற தலைப்பில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியின்போது இந்திய கடற்படையின் செயல்பாடுகள், பயிற்சி, மனிதவள மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பிற  முன்முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  மற்றொரு நிகழ்ச்சியில், கொச்சியில் பாதுகாப்பு படையினருடன் அவர் கலந்துரையாடினார்.

கடற்படை ஊழியர்கள் வாழ்க்கைத் துணை நலச் சங்கத்தின் அலுவலகம், மாநாட்டு மண்டபம், வகுப்பறைகள், யோகா அறைகள் போன்ற வசதிகளை  05 ஏப்ரல் 24 அன்று கடற்படை தளபதி முன்னிலையில் கடற்படை ஊழியர்கள் வாழ்க்கைத் துணை நலச் சங்கத்தின் (NWWA) தலைவர் திருமதி கலா ஹரி குமார் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, 'சம்பார்க் 3.0' என்ற பெயரில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ வசதி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

***

SM/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2017435) வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी