பிரதமர் அலுவலகம்

தில்லி துவாரகாவில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டங்களில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 OCT 2023 7:44PM by PIB Chennai

சியாவர் ராமச்சந்திரா கி ஜே!

சியாவர் ராமச்சந்திரா கி ஜே!

சக்தியை வழிபடும் திருவிழாவான, நவராத்திரி, வெற்றிப் பண்டிகையான விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஜயதசமி பண்டிகை அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியையும், ஆணவத்திற்கு எதிரான பணிவையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான பொறுமையையும் குறிக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

நிலவுக்குச் செல்லும் பயணத்தில் நாம் வெற்றி பெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நாம் விஜயதசமியைக் கொண்டாடுகிறோம். விஜயதசமி என்பது ஆயுத வழிபாட்டையும் உள்ளடக்கியது. சக்தியை நாம் வழிபடுவது நமக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த படைப்பின் நல்வாழ்வு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் மகிமைக்கானது.

நண்பர்களே,

இன்று, ராமரின் பிரம்மாண்டமான கோயில் கட்டுமானத்தைக் காணும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்துள்ளது. அயோத்தியில் அடுத்த ராம நவமி, கோவிலில் உள்ள கோஷங்களுடன் எதிரொலித்து, முழு உலகிற்கும் மகிழ்ச்சியைத் தரும்.

ராமர் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. ராமர் வருகிறார்.  நண்பர்களே, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். ராமரின் வருகைக்கான கொண்டாட்டம் விஜயதசமியுடன் தொடங்கியுள்ளது.

பாரதம் இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ஜனநாயக நாடாக வளர்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் அன்னையை உலகம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணங்களுக்கு மத்தியில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை ராமர் அலங்கரிக்க உள்ளார்.

நண்பர்களே,

வரவிருக்கும் 25 ஆண்டுகள் பாரதத்திற்கு மிக முக்கியமானவை. ஒட்டுமொத்த உலகமும் இப்போது பாரதத்தின் மீது கவனம் செலுத்துகிறது, நமது திறன்களை கவனித்து வருகிறது.

முதல் தீர்மானம் - வரும் தலைமுறையினரை மனதில் கொண்டு, முடிந்தவரை தண்ணீரை சேமிப்போம்.

இரண்டாவது தீர்மானம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மக்களை மேலும் மேலும் ஊக்குவிப்போம்.

மூன்றாவது தீர்மானம் - நமது கிராமங்களையும், நகரங்களையும் தூய்மையால் வழிநடத்துவோம்.

நான்காவது தீர்மானம் - "உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்போம்" என்ற மந்திரத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக பின்பற்றுவோம், இந்தியாவின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவோம்.

 

ஐந்தாவது தீர்மானம் - தரமான வேலையில் கவனம் செலுத்துவோம் மற்றும் தரமானப் பொருட்களை உற்பத்தி செய்வோம்.

ஆறாவது தீர்மானம் - நாடு முழுவதையும் சுற்றிப் பார்ப்போம், பயணம் மேற்கொள்வோம், யாத்திரை மேற்கொள்வோம், முழு நாட்டையும் பார்த்த பிறகு நேரம் இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்வது பற்றி யோசிப்போம்.

ஏழாவது தீர்மானம் - இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

எட்டாவது தீர்மானம் - நமது சிறு விவசாயிகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் வகையில், மிகச்சிறப்பான சிறுதானியங்களை - ஸ்ரீ அன்னாவை நம் வாழ்வில் இணைப்போம்.

ஒன்பதாவது தீர்மானம் - நமது தனிப்பட்ட ஆரோக்கியத்திற்காக யோகா, விளையாட்டு மற்றும் உடல் தகுதிக்கு முன்னுரிமை அளிப்போம்.

பத்தாவது தீர்மானம் - குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்தின் உறுப்பினராக மாறுவதன் மூலம், அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவோம்.

சியாவர் ராமச்சந்திரா கி ஜே!

சியாவர் ராமச்சந்திரா கி ஜே!

***

(Release ID: 1970511)

SMB/IR/AG/RR



(Release ID: 2017417) Visitor Counter : 18