பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போரின் மாறிவரும் தன்மைக்கு ஏற்ப ராணுவ அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் வலியுறுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 05 APR 2024 6:35PM by PIB Chennai

போரின் மாறிவரும் தன்மைக்கு ஏற்ப ராணுவ அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் எடுத்துரைத்தார். 2024, ஏப்ரல் 05  அன்று வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் 2024, ஏப்ரல் 05  அன்று இந்திய ராணுவத்தின் எதிர்கால அதிகாரிகளிடையே அவர் உரையாற்றினார்.

அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களின் பின்னணியில் இந்திய ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி தனது உரையில் எடுத்துரைத்தார். கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதில் கூட்டுணர்வு  மற்றும் முப்படைகளுக்கு இடையேயான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் தற்போது 79-வது பணியாளர் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இப்பயிற்சி 45 வாரங்கள் நீடிக்கும். தற்போதைய பயிற்சி வகுப்பில் 26 நட்பு நாடுகளைச் சேர்ந்த 36 மாணவர்கள் உட்பட 476 மாணவர்கள் உள்ளனர். முதன்முறையாக, எட்டு பெண் அதிகாரிகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

***

SM/SMB/RS/DL


(रिलीज़ आईडी: 2017272) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी