எரிசக்தி அமைச்சகம்
மேம்பட்ட புவியியல் மாதிரிகளைப் பயன்படுத்தி சுரங்கப்பாதை திட்ட செயல்திறனை மேம்படுத்த பாட்னா ஐ.ஐ.டியுடன் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (எஸ்.ஜே.வி.என்) கூட்டு சேர்ந்துள்ளது
प्रविष्टि तिथि:
03 APR 2024 12:48PM by PIB Chennai
சுரங்கப்பாதை திட்டங்களில் மேம்பட்ட புவியியல் மாதிரிகளைப் பயன்படுத்த பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (எஸ்.ஜே.வி.என்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
பல்வேறு புவிசார் தொழில்நுட்ப தரவுகளை ஒருங்கிணைக்கும் அதிநவீன வழிமுறைகளை உருவாக்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று எஸ்.ஜே.வி.என் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி கீதா கபூர் தெரிவித்தார். இவற்றில் புவியியல் ஆய்வுகள், ஆழ்துளை தரவு, புவி இயற்பியல் அளவீடுகள், எஸ்.ஜே.வி.என் திட்டங்களின் கண்காணிப்பு தரவு ஆகியவை அடங்கும்.
புதுதில்லியில் 2024 ஏப்ரல் 2 அன்று எஸ்.ஜே.வி.என் இயக்குநர் (நிதி), திரு ஏ.கே.சிங், பாட்னா ஐ.ஐ.டி இயக்குநர் திரு டி.என்.சிங் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
***
(Release ID: 2017029)
AD/SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2017059)
आगंतुक पटल : 146