தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
'தேசிய ஒலிபரப்புக் கொள்கை -2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்' குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது
Posted On:
02 APR 2024 1:09PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 'தேசிய ஒலிபரப்புக் கொள்கை -2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்' குறித்த ஆலோசனை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
'தேசிய ஒலிபரப்புக் கொள்கை -2024-ஐ உருவாக்குவதற்கான உள்ளீடுகள்' குறித்த இந்த ஆலோசனை அறிக்கை பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக தயாரிக்கப்பட்டு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in) பதிவிடப்பட்டுள்ளது. ஆலோசனை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் 30 ஏப்ரல் 2024-க்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
ஒலிபரப்புக் கொள்கைக்கான உள்ளீடுகளை உருவாக்க இந்த ஆய்வறிக்கை உத்தேசித்துள்ளதால், இந்த ஆலோசனை அறிக்கையில் எதிர் கருத்துகள் எதுவும் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதப்பட்ட கருத்துகளை மின்னணு வடிவத்தில், advbcs-@trai.gov.in மற்றும் jtadvisor-bcs@trai.gov.in-ல் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவல்களுக்கு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசகர் (ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகள்) திரு தேஜ்பால் சிங்கை தொலைபேசி எண்: +91-11-23664516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
***
SMB/RS/KV
(Release ID: 2016916)
Visitor Counter : 117