எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதி பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ ஊரக மின்மய கழகம் வென்றுள்ளது

Posted On: 01 APR 2024 6:19PM by PIB Chennai

மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமும், வங்கி சாராத நிதிக்கழக முன்னணி நிறுவனமுமான ஊரக மின்மய கழகம், 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதிப்' பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ வென்றுள்ளது. இந்த விருது நிலையான நிதியுதவிக்கான ஊரக மின்மய கழகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. ஊரக மின்மய கழகத்தின் செயல் இயக்குநர் திரு டி.எஸ்.சி. போஷ் புது தில்லியில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

 

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில், ஊரக மின்மய கழகம் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலையான எதிர்காலத்திற்கு தீவிரமாக பங்களிக்கிறது. பல்வேறு முயற்சிகள் மற்றும் சாதனைகள் மூலம், ஊரக மின்மய கழகம்  பல நிலையான திட்டங்களுக்கு உறுதியளித்துள்ளது. பசுமைத் திட்டங்களுக்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

 

மேலும், ஊரக மின்மய கழகமானது சூரிய சக்தி, காற்றாலை, மின்சாரப் போக்குவரத்து வாகனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  உற்பத்தி, பசுமை அம்மோனியா, பசுமை ஹைட்ரஜன், பேட்டரி சேமிப்பு போன்ற துறைகளில் பல்வேறு பசுமை திட்டங்களின் மேம்பாட்டாளர்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

 

ஸ்கோச் இஎஸ்ஜி  விருதுகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) நடைமுறைகளில் சிறந்த செயல்திறனை நிரூபிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. இது நீடித்த மற்றும் வளர்ந்து வரும் வணிக எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிலையான முதலீடுகள் மற்றும் செயல்முறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.


----

(Release ID: 2016827) 

ANU/SM/SMB/KPG/KRS


(Release ID: 2016848) Visitor Counter : 88