குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

உலகக் காசநோய் தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவரின் செய்தி

Posted On: 23 MAR 2024 3:42PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படும் உலகக் காசநோய் தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள  செய்தியில் கூறியிருப்பதாவது:-

"காசநோய் (டிபி) பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் மார்ச் 24 அன்று 'உலகக் காசநோய் தினம்' கடைப்பிடிக்கப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

காசநோயின் உலகளாவிய தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பது ஆகியவற்றை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது .

இந்தியாவைக் காசநோய் இல்லாத நாடாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்"

***

ANU/AD/SMB/DL


(Release ID: 2016222) Visitor Counter : 112