நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி இறக்குமதியில் சரிவு

Posted On: 22 MAR 2024 6:20PM by PIB Chennai

நாட்டின் மொத்த நிலக்கரி நுகர்வில் நிலக்கரி இறக்குமதியின் பங்கு குறைந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை நிலக்கரி இறக்குமதியின் பங்கு 21% ஆக குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.48% ஆக இருந்தது.

அனல் மின் நிலையங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு 36.69% குறைந்துள்ளது. இது ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை 19.36 மில்லியன் டன்னாக இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் இந்தக் குறைப்பு உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்துவதை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. இதனால் இறக்குமதியை நம்பியிருப்பது குறைந்து வருகிறது.

மாறாக, ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரை இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இறக்குமதியில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 94.21% அதிகரித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், மேற்கூறிய காலகட்டத்தில் நிலக்கரியின் இறக்குமதி விலையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியே இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். இந்தியா முதன்மையாக தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வெப்ப நிலக்கரியை இறக்குமதி செய்கிறது.

-----

ANU/PKV/KPG/KRS


(Release ID: 2016158) Visitor Counter : 83


Read this release in: English , Urdu , Hindi , Marathi