மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பாஷாநெட் இணையதளத்தை உலகளாவிய ஏற்பு தினத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் / இந்திய தேசிய இணையதள பரிமாற்றம் ஆகியவை வெற்றிகரமாக தொடங்கின

Posted On: 21 MAR 2024 7:16PM by PIB Chennai

பாஷாநெட் இணையதளம் இன்று உலகளாவிய ஏற்பு தினத்தில் தொடங்கப்பட்டதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் / இந்திய தேசிய இணையதள பரிமாற்றம் அறிவித்தன.  இந்தியா முழுவதும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், உலகளாவிய ஏற்பை ஊக்குவிப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

நிகழ்வின் கருப்பொருள், "பாஷாநெட்: உலகளாவிய ஏற்றுக்கொள்ளலை நோக்கி ஊக்கப்படுத்துதல்", மொழி அல்லது எழுத்து வடிவ தடைகளைப் பொருட்படுத்தாமல், அனைவரும் டிஜிட்டல் உலகில் முழுமையாக பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் / இந்திய தேசிய இணையதள பரிமாற்றத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

பாஷாநெட் மற்றும் எதிர்கால முன்னெடுப்புக் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள : https://bhashanet.in/home  என்ற இணையதளத்தில் காணவும்

-----

(Release ID: 2015980)

ANU/SM/IR/KPG/KRS



(Release ID: 2015993) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Marathi , Hindi