தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் அதன் டிஜிட்டல் புதுமைக் கண்டுபிடிப்பு வாரியத்தின் இணைத் தலைமைத்துவமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2024 6:10PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், 2024 மார்ச் 18 முதல் 20 வரை சர்வதேச தொலைத்தொடர்பு சங்க தலைமையகத்தில் தொடர்ச்சியான முக்கியமான கூட்டங்களுக்காக ஜெனீவா சென்றார். அவர் சென்ற உயர்மட்டக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கினார். தொலைத்தொடர்பு, தகவல், தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் புதுமையான முயற்சிகளை கண்டறிவது இப்பயணத்தின் நோக்கமாகும்.
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் அதன் டிஜிட்டல் புதுமைக் கண்டுபிடிப்பு வாரியத்தின் இணைத் தலைமைத்துவமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வகையில் திரு நீரஜ் மிட்டல் இணைத்தலைவராக செயல்படுவார்.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஆகிய 23 உறுப்பு நாடுகளின் தொலைத்தொடர்பு / தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இந்த டிஜிட்டல் கண்டுபிடிப்பு வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர்.
-----
(Release ID: 2015963)
ANU/SM/IR/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2015985)
வருகையாளர் எண்ணிக்கை : 188