தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு பொறியியல் மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் நடத்திய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு பயிலரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
20 MAR 2024 5:16PM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பங்கேற்புடன் "நாளை பயிரிடுதல்: இணையதளம், செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல் வேளாண்மையை மேம்படுத்துதல்" என்ற பயிலரங்கு 2024 மார்ச் 18 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து தொலைத்தொடர்பு பொறியியல் மையம் நடத்தியது.
செயற்கை நுண்ணறிவு, இணையதளம், ஆளில்லா வான்வழி வாகனங்கள், வேளாண் மதிப்புச் சங்கிலியில் பிற அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை ஆராயும் விரிவான விவாதங்கள் இந்த பயிலரங்கில் நடைபெற்றன. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான தலைப்புகளில் பயிலரங்கு நடைபெற்றது.
இந்த தொழில்நுட்பங்கள் மூலம் நிகழ்நேர தரவு, முன்கணிப்பு பகுப்பாய்வு மற்றும் செயல்படக்கூடிய நுண்ணறிவுகளுடன் விவசாயிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை பங்கேற்பாளர்கள் ஆராய்ந்தனர்.
***
AD/IR/RS/DL
(Release ID: 2015768)
Visitor Counter : 52