பாதுகாப்பு அமைச்சகம்
புலி வெற்றிப் பயிற்சி - 24
Posted On:
19 MAR 2024 7:06PM by PIB Chennai
இந்தியா, அமெரிக்கா இடையிலான இருதரப்பு முப்படை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நீர்-நில பயிற்சியான புலி வெற்றிப் பயிற்சியின் தொடக்க விழா இன்று (2024 மார்ச் 19 அன்று) இந்தியக் கடற்படைக் கப்பல் ஜலஷ்வாவில் நடைபெற்றது. இந்த பயிற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உத்திசார் கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. பன்னாட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாணர செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிறந்த நடைமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் மார்ச் 18 முதல் 25 வரை நடைபெறும் துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியில் தொழில்முறை பாடங்கள் குறித்த நிபுணர் பரிமாற்றம் மற்றும் பல்வேறு பணிகளின் திட்டமிடல் மற்றும் செயலாக்க நடைமுறைகள் குறித்த விவாதங்கள் ஆகியவை அடங்கும்.
***
SM/IR/RS/KRS
(Release ID: 2015602)