சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
கர்நாடகாவில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல்
Posted On:
16 MAR 2024 2:58PM by PIB Chennai
பிரதமரின், வளர்ச்சியடைந்த பாரதம் - வளமான பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் கர்நாடகாவில் 12 கல்வி நிறுவனங்களில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.127.23 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த 12 நிறுவனங்கள் 4200 மாணவர்களுக்குக் கல்வி வழங்குபவை. அவர்களில் 3150 பேர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடக மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாணவர்களின் அறிவுசார் மேம்பாட்டுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015232)
Visitor Counter : 76