பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நல்லாட்சிக்கான தேசிய மையம் பங்களாதேஷின் 71-வது தொகுதி குடிமைப் பணி ஊழியர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
15 MAR 2024 6:16PM by PIB Chennai
வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய மையம் ஏற்பாடு செய்த பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கான இரண்டு வார கால 71-வது தொகுதி திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று நிறைவடைந்தது. 1,500 அரசு ஊழியர்களுக்கான பயிற்சியின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த மைமய் 2025- க்குள் கூடுதலாக 1,800 அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்க பங்களாதேஷ் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வங்கதேசத்தைச் சேர்ந்த 983 அதிகாரிகளுக்கு இந்த மையம் ஏற்கனவே பயிற்சி அளித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய மையத்தை 'கவனம் செலுத்தும் நிறுவனம்' என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் திரு வி. ஸ்ரீனிவாஸ், நிறைவுரையாற்றினார். ஸ்ரீனிவாஸ் தமது நிறைவு உரையில், "அதிகபட்ச ஆளுமை – குறைந்தபட்ச அரசு" என்ற கொள்கையின் கீழ் மக்களையும் அரசையும் நெருக்கமாகக் கொண்டு வருவதில் தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்தார். மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வங்கதேசம், கென்யா, தான்சானியா, துனிசியா, செஷல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், எத்தியோப்பியா, எரிட்ரியா, வியட்நாம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 17 நாடுகளின் அரசு ஊழியர்களுக்கு என்சிஜிஜி பயிற்சி அளித்துள்ளது. அதிகரித்து வரும் தேவையை உணர்ந்து, என்.சி.ஜி.ஜி விரிவடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களுக்கு இடமளிக்கும் திறனை முன்கூட்டியே விரிவுபடுத்துகிறது. இந்த விரிவாக்கம் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும், நல்லாட்சிக்கான தேசிய மையம் வழங்கும் நிபுணத்துவம் மற்றும் வளங்களிலிருந்து அதிகமான நாடுகள் பயனடைவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-----
(Release ID: 2015020)
PKV/KPG/KRS
(रिलीज़ आईडी: 2015068)
आगंतुक पटल : 101