பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர்ட் லூயிஸ் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முதல் பயிற்சி படைப்பிரிவு

Posted On: 15 MAR 2024 3:28PM by PIB Chennai

ஐஎன்எஸ் டிஐஆர் மற்றும் சிஜிஎஸ் சாரதி ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் பயிற்சி படைப்பிரிவுதங்களது நீண்ட தூரப் பயிற்சியின் ஒரு பகுதியாக மொரீஷியஸின் போர்ட் லூயிஸுக்கு விஜயம் செய்தது. 57-வது மொரீஷியஸ் தேசிய தினக்கொண்டாட்டங்களுடன் இணைந்த இந்தப் பயணம்இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை எடுத்துக்காட்டுகிறதுமொரீஷியஸ் தேசிய தின நகர அணிவகுப்பில் ஒரு கடற்படைப் பிரிவு மற்றும் ஒரு ஹெலிகாப்டர் பங்கேற்றதுஇதில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

மொரீஷியஸின் கடல்சார் விமானப் படைப்பிரிவு மற்றும் போலீஸ் ஹெலிகாப்டர் படைப்பிரிவை பார்வையிட்ட இந்திய கடற்படை பயிற்சியாளர்களுக்கு இந்தப் பயணம் செழுமையானதாக இருந்ததுபல்வேறு பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாகமொரீஷியஸ் தேசிய கடலோரக் காவல் படை வீரர்களுக்கு 1டிஎஸ் கப்பல்களில் சிறு ஆயுதங்கள் மற்றும் தீயணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுஇது ஒன்றோடொன்று இயங்கும் தன்மையை மேலும் மேம்படுத்தியதுபோர்ட் லூயிஸுக்குள் நுழைவதற்கு முன்பு மொரீஷியஸ் கடலோர காவல்படை டோர்னியருடன் முதல் பயிற்சி படைப்பிரிவு கூட்டு கண்காணிப்பையும் மேற்கொண்டது.

இந்தப் பயணம் பிராந்திய பாதுகாப்புக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன்இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான வளமான கலாச்சார மற்றும் ராஜீய உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.

------

(Release ID: 2014913)

PKV/KPG/KRS


(Release ID: 2015045) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Hindi , Marathi