மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சாகர் பரிக்கிரமா திட்டம் குறித்த புத்தகம் மற்றும் வீடியோவை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்
Posted On:
15 MAR 2024 4:52PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் சாகர் பரிக்கிரமா திட்டம் குறித்த புத்தகம் மற்றும் காணொளி வெளியீட்டு விழா குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்கோட் பொறியியல் சங்கத்தில் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்கிரமா திட்டத்திற்கான புத்தகம் மற்றும் வீடியோ வெளியீட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, 05.03.2022 அன்று குஜராத்தின் மாண்ட்வியில் தொடங்கி 11.01.2024 அன்று மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் 12 கட்டங்களாக நிறைவடைந்த வரலாற்று பயணத்திற்கான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சாகர் பரிக்கிரமாவின் போது கடல் பயணம் சில நேரங்களில் கடுமையான கடல் நிலைமைகள் காரணமாக மிகவும் சவாலானதாக இருந்தது என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர், ஆனால் ஒரு வகையில் இது ஒரு கற்றல் அனுபவமாகவும் இருந்தது என்றும், நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சிரமங்கள் மற்றும் அன்றாட சவால்களைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். சாகர் பரிக்கிரமாவின் பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் கள அனுபவம் ஆகியவை இத்துறைக்கான கொள்கை மற்றும் திட்டங்களை வகுப்பதிலும், மீனவ சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
மீனவர்கள், இந்திய கடலோர காவல்படை, அனைத்து கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள், கடல்சார் வாரியங்கள் மற்றும் சாகர் பரிக்கிரமாவை வெற்றிகரமாக்குவதில் முக்கிய பங்கு வகித்த பிற பங்கெடுப்பாளர்கள் அளித்த ஆதரவு குறித்தும் திரு ரூபாலா குறிப்பிட்டார். சாகர் பரிக்கிரமாவின் போது இரவில் ஒரிசாவின் சிலிகா ஏரியில் சிக்கிக்கொண்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த மத்திய அமைச்சர், தன்னையும் மற்ற பிரமுகர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் சென்ற மீனவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு ரூபாலா, மகாராஷ்டிராவில் சாகர் பரிக்ரமாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிர முதலமைச்சர், மீன்பிடி வலைகளை எரிப்பதால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கு எதிராக உடனடி நிதி உதவியை வழங்கினார். சாகர் பரிக்கிரமா யாத்திரையின் போது இந்த பிரச்சினை அவரது கவனத்திற்கு வந்தது.
சாகர் பரிக்கிரமா யாத்திரையை முழுமையாக காலவரிசைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய முயற்சி. கடல்சார் பாதை, கலாச்சார மற்றும் புவியியல் ஆய்வுகள் மற்றும் சாகர் பரிக்கிரமாவின் அனைத்து 12 கட்டங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் போன்ற பல்வேறு கூறுகளின் உள்ளடக்கத்தை உள்ளடக்கிய சாகர் பரிக்கிரமா யாத்திரையை காலவரிசைப்படுத்துவதே புத்தகத்தின் நோக்கமாகும்.
சாகர் பரிக்கிரமா திட்டம் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும், இது கடல்களுடனான நாட்டின் நீடித்த உறவை பிரதிபலிக்கிறது. இந்த புத்தகம் இந்த காவிய பயணத்தின் விரிவான ஆவணமாக செயல்படுகிறது, கடந்து வந்த கடல்வழி, மேற்கொள்ளப்பட்ட கலாச்சார மற்றும் புவியியல் ஆய்வுகள் மற்றும் சாகர் பரிக்கிரமாவின் அனைத்து 12 கட்டங்களிலும் காணப்பட்ட குறிப்பிடத்தக்க தாக்கங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
மீன்வளம், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு பொருளாதார அதிகாரம் அளித்து, சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கான அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியா உலகின் 3வது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், 2-வது பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய இறால் உற்பத்தியாளராகவும், 4வது பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளராகவும் உள்ளது. மீனவர்கள், கடலோர சமுதாயத்தினர் மற்றும் சுற்றுலாப் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மீன்வளம் சார்ந்த திட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பவும், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் சாகர் பரிக்கிரமா மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2014973
***
SM/BS/AG/KV
(Release ID: 2014999)
Visitor Counter : 84