ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், பாரத் நிதி உள்ளடக்க நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 15 MAR 2024 4:26PM by PIB Chennai

தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாழ்வாதார செயல்பாடுகளை கால்நடை மற்றும் மீன்வள மேம்பாட்டுடன் ஒருங்கிணைத்து உதவுவதற்காக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், பாரத் நிதி உள்ளடக்க நிறுவனத்துடன் நிதி சாரா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் மற்றும் செயல் துணைத் தலைவர் திரு ஜே.ஸ்ரீதரன் ஆகியோர் புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.

வருமானத்தை அதிகரிப்பதற்கும், குடும்பங்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று திரு சரண்ஜித் சிங் குறிப்பிட்டார். தெளிவான வெளியீடுகளுடன் முழுமையான அணுகுமுறையில் நாம் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆரம்ப கட்டத்தில் தேசிய அளவில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மையப்படுத்தப்பட்ட திட்ட கண்காணிப்பு அலகு அமைக்கப்படும். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மாநில திட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விரிவாக்கப் பணியாளர்களை வலுப்படுத்தி, விலங்குகளுக்கு அடிப்படை சுகாதார உதவிகளை வழங்கும்.

தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தில் உள்ள சுய உதவிக் குழு குடும்பங்களுக்கு கால்நடை தொகுப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் வசதிகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் இதர அம்சங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2014946

***

SM/BS/AG/KV



(Release ID: 2014997) Visitor Counter : 83


Read this release in: English , Urdu , Hindi , Telugu