எரிசக்தி அமைச்சகம்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டாவில் 200 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை என்.எச்.பி.சி உருவாக்குகிறது
Posted On:
15 MAR 2024 3:14PM by PIB Chennai
இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமுமான என்.எச்.பி.சி நிறுவனம், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டாவில் குஜராத் மாநில மின்சாரக் கழக நிறுவனம் (ஜி.எஸ்.இ.சி.எல்)1,125 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் அமைக்கப்படவுள்ள 200 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை உருவாக்குவதற்கான ஏலத்தை வென்றுள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த முதல் ஆண்டில் சுமார் 473 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேலும் 25 ஆண்டுகளில் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி சுமார் 10,850 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். ரூ.847 கோடி உத்தேச மேம்பாட்டு செலவில் கட்டி இயக்கி மாற்றுதல் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை என்.எச்.பி.சி உருவாக்கும்.
இந்த திட்டத்திற்கான இ-ரிவர்ஸ் ஏலம் குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்தால் 2024 மார்ச் 2 அன்று நடத்தப்பட்டது மற்றும் 2024 மார்ச்14 அன்று விருப்பக் கடிதம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.66 என்ற கட்டணத்தில் பெறப்பட்டுள்ளது மற்றும் 18 மாத காலத்தில் முடிக்கப்படும்.
***
SM/BS/AG/KV
(Release ID: 2014938)