சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நிதின் கட்கரி தெலங்கானாவில் சி.ஆர்.ஐ.எஃப் -இன் கீழ் மொத்தம் 435.29 கி.மீ நீளமுள்ள 31 மாநில சாலைத் திட்டங்களை அகலப்படுத்தவும் வலுப்படுத்தவும் ரூ.850.00 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2024 1:27PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில், மத்திய சாலை பாதுகாப்பு நிதியத்தின் கீழ் மொத்தம் 435.29 கி.மீ நீளமுள்ள 31 மாநில சாலைத் திட்டங்களை அகலப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு ரூ.850.00 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவித்து, பிராந்திய பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார். கூடுதலாக, இது சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
***
(Release ID: 2014514)
PKV/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2014764)
வருகையாளர் எண்ணிக்கை : 115