மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடல் பயணம் குறித்த புத்தகம் மற்றும் காணொலியை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா நாளை வெளியிடுகிறார்

प्रविष्टि तिथि: 14 MAR 2024 5:02PM by PIB Chennai

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொறியியல் சங்கத்தில் கடல் பயணம் குறித்த புத்தகம் மற்றும் காணொலியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, 2024, மார்ச் 15  அன்று காலை 09:00 மணிக்கு வெளியிடுகிறார்.

மத்திய அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், டாக்டர் எல்.முருகன் மற்றும்  பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கடல் பயணம் யாத்திரையை காலவரிசைப்படுத்துவதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்.

கடல் பயணம் பற்றிய இந்த புத்தகத்தில் கடல் பயணத்தின் தோற்றம், மேற்குக் கடற்கரை, கிழக்கு கடற்கரை ஆகியவற்றை உள்ளடக்கிய 7 அத்தியாயங்கள் உள்ளன. இந்த ஆவணம் கடலோர மீனவர்களின் சவால்கள், அவர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மீன்வள பாரம்பரியம் பற்றிய நுண்ணறிவை வழங்கும். ஒட்டுமொத்த கடல் பயணமும் குறும்பட வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, இதில் மத்திய அமைச்சர் பயனாளிகளுடன் நடத்திய அனைத்து நடவடிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

***

SM/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 2014715) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati