விவசாயத்துறை அமைச்சகம்
சமையல் எண்ணெய் தற்சார்புக்கான தொலைநோக்கு வடகிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ளது: தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் பனை எண்ணெய் பதப்படுத்தும் ஆலை தொடக்கம்
प्रविष्टि तिथि:
14 MAR 2024 3:23PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பை சுட்டிக்காட்டினார். வடகிழக்கு மாநிலங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பு இயக்கமான பாமாயில் இயக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்த இயக்கத்தின் கீழ் முதலாவது எண்ணெய் ஆலையை தொடங்கி வைத்தார். "பனை எண்ணெய் இயக்கம் சமையல் எண்ணெய் துறையில் இந்தியாவை தற்சார்பாக மாற்றுவதுடன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்" என்று பிரதமர் கூறினார். பனை சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மத்திய அரசு 2021 ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. பனை எண்ணெய் சாகுபடியை அதிகரிப்பதற்கும், 2025-26 –ம் ஆண்டுக்குள் கச்சா பாமாயில் உற்பத்தியை 11.20 லட்சம் டன்களாக உயர்த்துவதற்கும் இந்த இயக்கம் உறுதிபூண்டுள்ளது.
***
PKV/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2014645)
आगंतुक पटल : 145