வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமரின் விரைவுச் சக்தியின் கீழ், கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 67-வது கூட்டம் ஐந்து உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது

Posted On: 13 MAR 2024 4:42PM by PIB Chennai

கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 67-வது கூட்டம் மார்ச் 12-ம்தேதி புதுதில்லியில்தொழில் மற்றும் வெளி நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில்சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூன்று திட்டங்கள் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அந்தந்த உள்கட்டமைப்பு அமைச்சகங்களில் கட்டமைப்புத் திட்டமிடல் பிரிவுகளை வழிநடத்தும் உறுப்பினர்களும் அடங்குவர்.

விரிவான பிராந்திய சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரதமரின் விரைவு சக்தியின் கொள்கைகளுடன் இணைந்த உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த திட்டமிடல் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள மகாராஷ்டிராஉத்தரப்பிரதேசம்பீகார்அசாம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பது, உத்தரப்பிரதேசத்தின் அலிகார் முதல் பல்வால் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 334 டி பிரிவை 4 வழி கட்டமைப்பாக அகலப்படுத்துவதுபீகார் மாநிலத்தில் அனிஷாபாத் - அவுரங்காபாத் - ஹரிஹர்கஞ்ச் சாலையில் நான்கு வழி உயர்த்தப்பட்ட பாதை அமைப்பது, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையே புதிய அகல ரயில் பாதை அமைப்பது, பீகாரில் இரட்டிப்பு ரயில் பாதை அமைப்பது ஆகிய திட்டங்கள்  இதில் அடங்கும்.

பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்வதையும்கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை வழங்குவதையும்பிராந்தியங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் இந்தத் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

***

PKV/RS/KRS



(Release ID: 2014220) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi , Marathi