சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உத்தராகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 121 (புதிய எண்-309) காஷிப்பூர் முதல் ராம்நகர் வரையிலான பிரிவை மேம்படுத்த ரூ.494.45 கோடிக்கு திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 12 MAR 2024 12:49PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தராகண்ட் மாநிலத்தில் உதம் சிங் நகர் மற்றும் நைனிடால் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை 121-ன் (புதிய எண்-309) காஷிப்பூர் முதல் ராம்நகர் வரையிலான பிரிவில் மறுவாழ்வு மற்றும் மேம்படுத்தலுக்காக 494.45 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

காஷிப்பூர்-ராம்நகர் பிரிவுஜிம் கார்பெட் தேசியப் பூங்காவுக்கான இணைப்பை மேம்படுத்தும். ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா உத்தரப்பிரதேசம் மற்றும் ராம்பூர் (உத்தரப்பிரதேசம்) முதல் தில்லி/லக்னோ வரையிலான போக்குவரத்துக்கான பிரபலமான சுற்றுலாத் தலமாகும். திட்ட பாதிப்பு பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும். இந்த திட்ட நடைபாதை உத்தரகண்ட் மாநிலத்தின் பரபரப்பான சுற்றுலா பாதைகளில் ஒன்றாகும். இது சாலைப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் பயண நேரத்தை குறைக்கும்.

***

(Release ID: 2013672)

SM/KRS



(Release ID: 2013746) Visitor Counter : 43