சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் 13.087 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 150 ஏ-க்கு ரூ.626.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

Posted On: 12 MAR 2024 12:46PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர்நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில்பெல்லாரி மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் 13.087 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 150-ஏ-வின் பெல்லாரி முதல் பைராபூர் வரையிலான பிரிவை உள்ளடக்கிய பெல்லாரி புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ரூ.626.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெல்லாரி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும்சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று அவர் கூறினார். கூடுதலாகபரந்த ஹோஸ்பேட் முதல் பெல்லாரி திட்டத்தின் ஒரு பகுதியாக தெற்குப் பகுதியில் 28 கி.மீ புறவழிச்சாலை ஏற்கனவே நடந்து வருகிறது.

***

(Release ID: 2013670)

SM/KRS



(Release ID: 2013744) Visitor Counter : 35