சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 716-ல் தமிழகம்/ஆந்திரப் பிரதேச எல்லையில் இருந்து புத்தூர் (20.03 கி.மீ) வரை தற்போதுள்ள இருவழிப் பாதையை ரூ.1346.81 கோடி மதிப்பில் விரிவாக்க திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 12 MAR 2024 12:45PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 716-ல் தமிழகம்/ஆந்திரப் பிரதேச எல்லையில் இருந்து புத்தூர் (20.03 கி.மீ) வரை தற்போதுள்ள இருவழிப் பாதையை ரூ.1346.81 கோடி மதிப்பில் விரிவாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திரப் பிரதேசத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 716-ல் தமிழ்நாடு/ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து புத்தூர் (20.03 கி.மீ) வரை நீண்டுள்ள இருவழிப் பாதையின்   விரிவாக்கத்திற்கு 1346.81 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நடைபாதை இணைப்புடன் 4-வழிப்பாதை அளவுக்கு  மேம்படுத்துவது அடங்கும். மேலும், தேசிய நெடுஞ்சாலை 71-ல் மல்லாவரம் சந்திப்பு முதல் ரேணிகுண்டா சந்திப்பு வரை (17.40 கி.மீ) தற்போதுள்ள 4-வழிப் பாதையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் தொகுப்பு-2 இன் கீழ் எச்ஏஎம் முறையைப் பயன்படுத்தி நடைபெற உள்ளது.

 

புனித நகரங்களான திருத்தணி மற்றும் திருப்பதியை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், குறிப்பிட்ட பாதையை முழுமையாக அணுகல் கட்டுப்பாட்டில் உள்ள வழித்தடமாக மாற்றுவதை இந்த மேம்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

***

(Release ID: 2013669)

PKV/AG/KRS



(Release ID: 2013699) Visitor Counter : 43


Read this release in: English , Urdu , Hindi , Telugu