இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு மீராபாய் சானு பாரிசில் பயிற்சி பெற உள்ளார்
प्रविष्टि तिथि:
11 MAR 2024 6:26PM by PIB Chennai
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், பாரிசில் உள்ள லா ஃபெர்டே-மிலோனில் பயிற்சி பெற வேண்டும் என்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவின் முன்மொழிவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் 126-வது கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தாம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே அங்குள்ள பருவநிலை மற்றும் பெரிய விளையாட்டு நிகழ்வுக்கு தயாராகும் வகையில் அங்கு செல்லவுள்ளார்.
பாரிஸ் பயிற்சி முகாமின் போது, மீராபாயுடன் இரண்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் பங்கேற்க உள்ளனர். அவர்களின் விமான டிக்கெட், விசா செலவு, தங்குமிட கட்டணங்கள், உணவு, பயிற்சி செலவு, உள்ளூர் போக்குவரத்து செலவு, மருத்துவ காப்பீடு ஆகியவை ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட உள்ளது.
***
AD/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 2013545)
आगंतुक पटल : 135