நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு துறைகளில் உள்ள ஆய்வகங்களில் சோதனை வசதிகளுக்காக ரூ. 340 கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன- முக்கிய பிரிவுகளில் சோதனை வசதிகளுக்கு ஆய்வகங்களை மேம்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது
Posted On:
11 MAR 2024 5:22PM by PIB Chennai
நாட்டில் தரமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தும் வகையில், நாட்டில் ஆய்வக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மத்திய தர நிர்ணய அமைப்பான தர நிர்ணய அமைவனத்தின் (BIS) மூலம் ஒரு திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்துகிறது. ஜவுளி, உணவு, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சோதனை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் தர கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.
பல்வேறு துறைகளில் சோதனை வசதிகள் மற்றும் ஆய்வக உள்கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் கிடைக்க அதிகரிக்க அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை, அரசு ஆய்வகங்களில் சோதனை வசதிகளை உருவாக்க ரூ. 340 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களைப் பரிசீலித்துள்ளது.
முக்கியமான பிரிவுகளில் சோதனை வசதிகளை அதிகரிக்கவும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு இப்போது விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் பிஐஎஸ் இணையதளமான www.bis.gov.in -ல் இடம்பெற்றுள்ளது.
*************
Release ID: 2013454
AD/PLM/KRS
(Release ID: 2013539)
Visitor Counter : 76