பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
"வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி ஜம்மு & காஷ்மீரின் கத்துவாவில் அமைக்கப்படுகிறது": டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
10 MAR 2024 4:49PM by PIB Chennai
"வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ .80 கோடி செலவில் ஜம்மு & காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தின் ஜஸ்ரோட்டா பகுதியில் அமையும்" என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், ஜஸ்ரோட்டா கிராமத்தில் கல்லூரி அமைய உள்ள உத்தேச இடத்தை இன்று பார்வையிட்டார், அங்கு ஏற்கனவே சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கல்லூரி பணிகள் குறித்து ஆயுஷ் துறையின் பொறியாளர்கள் மற்றும் மூத்த நிபுணர்கள் அமைச்சருக்கு விளக்கினர்.
2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே கையில் எடுக்கப்பட்ட உதம்பூர்-கதுவா-தோடா மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் தேதி வரை தடையின்றி தொடரும் என்றும், மாதிரி நடத்தை விதிகள் நீக்கப்பட்ட உடனேயே மீண்டும் தொடங்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். .
இந்த கோரிக்கையை முன்வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், 70-80 கோடி ரூபாய் செலவில் வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி கத்துவா மக்களுக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.
புதிய கல்லூரி 8 ஏக்கர் பரப்பளவில் அமையும் என்றும், அருகிலுள்ள மூன்று ஏக்கர் நிலமும் காலப்போக்கில் தற்போதுள்ள வளாகத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் ஒரு மருத்துவமனை வளாகம், ஒரு கல்லூரி, ஒரு நிர்வாக தொகுதி மற்றும் மாணவர்கள், மாணவிகளுக்கு தலா ஒரு விடுதி ஆகியவை கட்டப்படும்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காலியாக இருக்கும் இடம் கலையரங்கம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வட இந்தியாவில் ஹோமியோபதி பட்டம் பெற விரும்புவோருக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பது மட்டுமல்லாமல், தேவைப்படும் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சையையும் இது வழங்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். "ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவத் துறைகளுடன் அலோபதியை ஒருங்கிணைப்பதை உள்ளடக்கிய மோடி அரசாங்கத்தின் சுகாதார அணுகுமுறைக்கு ஏற்பவும் இது இருக்கும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2013292)
Visitor Counter : 111