பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் சேலா சுரங்கப்பாதையை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


தவாங்கிற்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற இணைப்பை வழங்கவும், மக்களின் எளிதான பயணத்தை மேம்படுத்தவும் இந்த சுரங்கப்பாதை பயன்படும்: பிரதமர்

13,000 அடி உயரத்தில் பி.ஆர்.ஓ நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, பாதுகாப்பு தயார்நிலையை அதிகரிப்பதற்கும் எல்லைப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பயன்படும்

Posted On: 09 MAR 2024 1:21PM by PIB Chennai

அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் 2024  மார்ச் 09 அன்று நடந்த வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த வடகிழக்கு நிகழ்வின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி சேலா சுரங்கப்பாதை திட்டத்தை மெய்நிகர் முறையில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அசாமின் தேஜ்பூரையும் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள தவாங்கையும் இணைக்கும் சாலையில் 13,000 அடி உயரத்தில் எல்லை சாலைகள் அமைப்பால் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ .825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, பாலிபாரா - சாரிதுவார் - தவாங் சாலையில் சேலா பாஸ் வழியாக தவாங்கிற்கு அனைத்து பருவநிலைகளிலும் இணைப்பை வழங்கும், இது ஆயுதப்படைகளின் தயார்நிலையை அதிகரிக்கும் மற்றும் எல்லைப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

பிரதமர் தனது உரையில், வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியில் அரசின் உறுதியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். சேலா சுரங்கப்பாதை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற இணைப்பை வழங்குவதுடன், தவாங் மக்களுக்கு எளிதான பயணத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். இப்பகுதியில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார். 

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி முன்பு புறக்கணிக்கப்பட்டதை பிரதமர் விமர்சித்தார். தேர்தல் காரணங்களுக்காக அல்லாமல், தேசத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படும் தனது பாணியை அவர் மீண்டும் குறிப்பிட்டார்.  தனது அடுத்த பதவிக்காலத்தில் இந்த பொறியியல் அதிசயத்தில் அவர்களை சந்திக்க வருவதாக அவர் பாதுகாப்பு வீரர்களிடம் உறுதியளித்தார்.

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. பெமா காண்டு, புவி அறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சேலா சுரங்கப்பாதை புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது மற்றும் மிக உயர்ந்த தரத்தின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இந்த திட்டம் பிராந்தியத்தில் வேகமான மற்றும் திறமையான போக்குவரத்து பாதையை வழங்குவது மட்டுமல்லாமல், நாட்டிற்கு உத்திப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த சுரங்கப்பாதைக்க்கு, 2019 பிப்ரவரி 09 அன்று பிரதமரால்  அடிக்கல் நாட்டப்பட்டது, மேலும் கட்டுமானம், 2019 ஏப்ரல் 01அன்று தொடங்கியது. கடினமான நிலப்பரப்பு மற்றும் பாதகமான வானிலை போன்ற சவால்களை சமாளித்து இந்த சுரங்கப்பாதை வெறும் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் பி.ஆர்.ஓ எப்போதும் முன்னணியில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், பி.ஆர்.ஓ ரூ .8,737 கோடி செலவில் கட்டப்பட்ட 330 உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்து சாதனை படைத்துள்ளது.

***

ANU/AD/BS/DL


(Release ID: 2013030) Visitor Counter : 126