பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் ஜன்மன் இயக்கத்தின் கீழ் கடந்த 3 மாதங்களில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024, ஜனவரி 15 அன்று பிரதமர் முதலாவது தவணையை வெளியிட்டார்

Posted On: 08 MAR 2024 4:07PM by PIB Chennai

ரூ.24,000 கோடி திட்ட ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகள் நடைபெறும் பிரதமரின் ஜன்மான் இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். கடந்த 3 மாதங்களில், ரூ.7000 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை நில ஆர்ஜிதம், விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிப்பது, சம்பந்தப்பட்ட மாநில துறைகளின் ஒப்புதல் பெறுவது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் ஒப்புதல்கள் பெறுவது ஆகியவை அடங்கும்.
 பெரும்பாலான மாநிலங்களில், பட்ஜெட் ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்கு விடுவிக்கப்பட்டு, வீட்டுவசதி, தண்ணீர், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் பல்நோக்கு மையங்கள் தொடர்பான திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் 2024 ஜனவரியில் அனுமதிக்கப்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வன்தன் மையங்களில் தொழிற்பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

30,000 குடியிருப்புகளின் தரவுகள் கைபேசி செயலி மூலம் மாநிலங்களால் சேகரிக்கப்பட்டு, விரைவு சக்தி இணையதளத்தில் உருவாக்கப்பட்டு, குக்கிராம அளவில் பல்வேறு உள்கட்டமைப்பு இடைவெளிகளை மதிப்பிடுவதற்காக மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் / துறைகளால் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்பை முடிக்க 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 டிசம்பர் 2023 முதல் 10,000  க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கடந்த 4 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆதார், 5 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள், 50,000 ஜன்தன் கணக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எஃப்.ஆர்.ஏ பட்டா பெற்ற 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் பலன் வழங்கப்பட்டது.

***

AD/PKV/RS/KRS



(Release ID: 2012819) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi