அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் சம்பாவத்தில் எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
07 MAR 2024 11:53AM by PIB Chennai
டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் மற்றும் உத்தராகண்ட் அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் (யுகோஸ்ட்) இடையே மார்ச் 5-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹரேந்திர சிங் பிஷ்த், யுகோஸ்ட் தலைமை இயக்குநர் பேராசிரியர் துர்கேஷ் பந்த் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு, சம்பாவத்தில் பைன் நீடில்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வரலாற்று திட்டத்தை அவர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சி.எஸ்.ஐ.ஆர் - இந்திய பெட்ரோலிய நிறுவனம் சம்பாவத்தில் அடிமட்ட அளவில் இரண்டு முக்கிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்பங்களில் பைன் நீடில்ஸூம் ஒன்றாகும். இதைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிகட்டிகள், எரிசக்தி சேமிப்பு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஒரு விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் முன்முயற்சியின் ஒரு பகுதியாக சம்பாவத்தில் உள்ள எரிசக்தி பூங்காவில் இந்த எரிகட்டி அலகு நிறுவப்படும். உற்பத்தி செய்யப்படும் எரிகட்டிகள் வீடுகள் மற்றும் உள்ளூர் தொழில்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2012113
***
PKV/AG/KV
(Release ID: 2012163)
Visitor Counter : 99