சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் நாடியா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை 34-ன் விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.553.12 கோடியை திரு நிதின் கட்கரி ஒதுக்கீடு செய்துள்ளார்
प्रविष्टि तिथि:
06 MAR 2024 12:09PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில், தேசிய நெடுஞ்சாலை (ஓ) திட்டத்தின் கீழ், நாடியா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் பரவியுள்ள தேசிய நெடுஞ்சாலை 34-ல் உள்ள கிருஷ்ணாகர்-பெஹ்ராம்பூர், பராசத் – பரஜாகுலி பிரிவுகளை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த, 553.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒட்டுமொத்த நீளம் 28.23 கி.மீ. இத்தகவலை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இருவழி நெடுஞ்சாலையில் நெரிசலைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தச் சாலைப் பிரிவுகள் மேம்படுத்தப்படுகின்றன. இது தெற்கு வங்காளத்திலிருந்து வடக்கு வங்காளத்திற்கு சரக்கு போக்குவரத்தை அதிகரித்து, மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2011823)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2011845)
आगंतुक पटल : 139