பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முன்முயற்சிகள் குறித்து, இரண்டு நாள் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ராணுவ விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
03 MAR 2024 12:39PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (மேக் இன் இந்தியா) முன்முயற்சிகளை முன்னோக்கி எடுத்துச் சென்று தீவிரமாக செயலாற்றும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ விவகாரத் துறை, இரண்டு நாட்கள் (2024 மார்ச் 4 மற்றும் 5) ஆலோசனை மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் முக்கிய பிரதிநிதிகள், பாதுகாப்புத் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரிடம் தீவிர கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நடத்தப்படுகிறது. உயர்மட்ட விவாதங்கள் மூலம் ஆலோசனைகளைப் பெற்று, உள்நாட்டுமயமாக்கலுக்கு உத்வேகம் அளிப்பது இதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி. மேம்பாடு மற்றும் உற்பத்திச் சூழல் அமைப்பில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூட்ட அமர்வுகளுக்குத் தலைமை வகிப்பார். பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே சிறப்புரையாற்றவுள்ளார்.
***
ANU/AD/PLM/DL
(रिलीज़ आईडी: 2011083)
आगंतुक पटल : 124