எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் எலெக்ரமா கண்காட்சி நடத்தப்படுவதற்காக இந்திய மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர் சங்கத்துக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்
Posted On:
28 FEB 2024 5:47PM by PIB Chennai
இந்திய மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA), உலகின் மிகப்பெரிய மின் கண்காட்சியான எலெக்ரமா (ELECRAMA) என்ற கண்காட்சியை 16 வது முறையாக நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 22 முதல் 26ம் தேதி வரை தில்லியில் நடைபெற உள்ளது.
"நிலையான எதிர்காலத்திற்கு எரிசக்தித் துறையை மறு வரையறை செய்தல்" என்ற கருப்பொருளுடன் இது நடத்தப்படுகிறது. பசுமையான, அதிக திறன் கொண்ட எரிசக்தி சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலெக்ரமா 2025 அறிவிப்பைப் பாராட்டியுள்ள மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங், எலெக்ரமா என்பது எதிர்காலத்தை வரையறுக்கும் நிகழ்வு எனவும் இதன் கருப்பொருள், அரசின் எரிச்சக்தி கொள்கைகள் மற்றும் அது தொடர்பான முயற்சிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
***
ANU/PKV/PLM/RS/DL
(Release ID: 2009901)