சுரங்கங்கள் அமைச்சகம்
முக்கியமான, உத்திசார்ந்த கனிமப்பகுதிகளின் இரண்டாவது ஏலத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
28 FEB 2024 4:35PM by PIB Chennai
முக்கியமான, உத்திசார்ந்த கனிமப்பகுதிகளின் இரண்டாவது ஏலத்தை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி நாளை (பிப்ரவரி 29) தொடங்கி வைக்கிறார். அப்போது, சுரங்கம் மற்றும் கனிமத் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி மானியத்திற்கான ஆணைகள் வழங்கப்படும்.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய பாதுகாப்புக்கும் முக்கிய கனிமங்கள் அவசியமாகும். எதிர்கால உலகப் பொருளாதாரம் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் மற்றும் அரிய பூமி கூறுகள் போன்ற கனிமங்களைச் சார்ந்துள்ள தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து ஒட்டுமொத்த மின்சார நிறுவும் திறனில் 50 சதவீதத்தை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.
***
ANU/PKV/IR/AG /DL
(Release ID: 2009896)
Visitor Counter : 84