வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாட்டில் மேல்முறையீட்டு அமைப்பு, பிரச்சனை தீர்வு சீர்திருத்தங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது

Posted On: 28 FEB 2024 4:18PM by PIB Chennai

அபுதாபியில் 2024 பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் மேல்முறையீட்டு அமைப்பு, பிரச்சனை தீர்வு சீர்திருத்தங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேல் முறையீட்டு அமைப்பில் உறுப்பினர்களை நியமிக்க அமெரிக்கா  தடை விதித்ததையடுத்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் பிரச்சனை தீர்வுக்கான மேல்முறையீட்டு அமைப்பு  செயல்படவில்லை என்று உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  இது உலக வர்த்தக அமைப்பின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும், அதன் விதிகள் அடிப்படையிலான வர்த்தக ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியது.

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படும் பிரச்சனைத் தீர்வு முறையை உருவாக்கும் நோக்கில் விவாதங்களை நடத்த 12-வது அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களின் உறுதிப்பாட்டை இந்தியா நினைவு கூர்ந்தது.

எந்தவொரு சீர்திருத்த செயல்முறையின் விளைவும் மேல்முறையீட்டு அமைப்பை மீட்டெடுப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது, இது இந்தியாவின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.

***

ANU/PKV/IR/AG /DL


(Release ID: 2009874) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Marathi , Hindi