பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அனுபவ் விருது பெற்றவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்து, ஊழியர்களை ஊக்குவிக்க, மத்திய ஓய்வூதியர் நலத்துறை, மாதாந்திர காணொலிக் கருத்தரங்கத்தை 'அனுபவ் விருது பெற்றவர்கள் பேசுகிறார்கள்' என்ற தலைப்பில் நடத்துகிறது

Posted On: 28 FEB 2024 9:38AM by PIB Chennai

அனுபவ் விருதுகள் திட்டம் ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அனுபவ தளம் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில், அனுபவ் விருதுகளும், நடுவர் சான்றிதழ்களும்  வழங்கப்படுகின்றன. 2015–ம் ஆண்டு முதல் இதுவரை 54 அனுபவ் விருதுகளும், 09 நடுவர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

அனுபவ் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடுவது மத்திய அரசுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக மாதாந்திர காணொலிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. இன்று வரை, பதினாறு காணொலிக் கருத்தரங்குகள்  நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 27 பேச்சாளர்கள் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றியுள்ளனர்.

பதினாறாவது கருத்தரங்கு நேற்று (27 பிப்ரவரி 2024) நடைபெற்றது. இதில் அனுபவ் விருது பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரி திரு சஷி குமார் வலியதன் பங்கேற்றுத் தமது தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் நாடு முழுவதும் 526 இடங்களில் இருந்து  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2009626)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2009767) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Marathi , Hindi