சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக அரசு அதிகாரிகளுடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2024 12:14PM by PIB Chennai

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசுப் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் பேசிய தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் வேண்டுமென்றே தனக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை மீறியுள்ளார் என்று கூறினார். கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட பிறகும் அவர் ஆணையத்தின் முன் ஆஜராகாதது குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அதிருப்தி தெரிவித்தார்.

***

(Release ID: 2009688)

ANU/PKV/PLM/RS/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2009731) வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada