அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
"அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம்- தேசிய உலோகவியல் ஆய்வகம், அறிவுசார், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு தளம் ஆகியவை அறிவியல் கல்வியில் அதிநவீன அனுபவ கற்றல் நுட்பங்களுடன் நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது"
Posted On:
28 FEB 2024 10:46AM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 27 அன்று, ஒரு சிறப்பு இணையவழி ஆசிரியர் பயிற்சித் திட்டம் நடைபெற்றது. 'அறிவியல் கல்வியில் அனுபவக் கற்றலை வளர்த்தல், பாடப்புத்தகத்திற்கு அப்பால்' என்ற கருப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்)- தேசிய உலோகவியல் ஆய்வகம் (என்எம்எல்), அறிவுசார், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு தளம் ஆகியவற்றுடன் இணைந்து ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அறிவுசார், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு தளத்தின் ஐந்தாவது தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்தைக் குறித்தது. அறிவியல் கல்வியின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய பாட வல்லுநர்களால் நடத்தப்பட்ட விரிவான பயிற்சி அமர்வுகளில் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம், ஆசிரியர்கள் மதிப்புமிக்க விஞ்ஞானிகளான டாக்டர் சந்தீப் கோஷ் சவுத்ரி (சிஎஸ்ஐஆர்-என்எம்எல் முதன்மை விஞ்ஞானி), டாக்டர் கே.கோபால கிருஷ்ணா (சிஎஸ்ஐஆர்-என்எம்எல்- முதன்மை விஞ்ஞானி), டாக்டர் அனிமேஷ் ஜனா (மூத்த விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்-என்.எம்.எல் ஆகியோருடன் உரையாடவும், கற்றுக்கொள்ளவும் வாய்ப்பைப் பெற்றனர்.
விஞ்ஞானிகள் தங்கள் விளக்கக்காட்சியின் போது பல பாடங்களை ஆராய்ந்து, சி.எஸ்.ஐ.ஆர்-என்.எம்.எல் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கினர்.
***
ANU/PKV/IR/AG /KRS
(Release ID: 2009727)
Visitor Counter : 103