ஆயுஷ்

புனே மற்றும் ஜஜ்ஜாரில் 'ஆயுஷ் திட்டங்களை' பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் 'நிசர்க் கிராம்' தொடக்க விழா: ரூ.213.55 கோடி.

ஹரியானாவின் ஜஜ்ஜாரில் 'யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம்' திறப்பு: 63.88 கோடி ரூபாய்

Posted On: 24 FEB 2024 6:01PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது குஜராத் பயணத்தின்போது, பிப்ரவரி 25 அன்று ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு நிறுவனங்களை திறந்து வைக்கிறார்.

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள 'நிசார்க் கிராம்' என்ற பெயரில் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம்  மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள 'யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம்'  ஆகியவை 2024 பிப்ரவரி 25 அன்று பிரதமரால் காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

நிசர்கா - தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், புனே

'நிசார்க் கிராம்' என்பது 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும், இது பல்துறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவை மையத்துடன் இளங்கலை  / முதுகலை / துணை மருத்துவப் படிப்புகளுக்கான இயற்கை மருத்துவக் கல்லூரியை கொண்டுள்ளது.

கல்லூரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, கலையரங்கம், யோகா மண்டபம், குடிசைகள் மற்றும் புகழ்பெற்ற காந்தி மெமோரியல் ஹால் உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத வசதிகளும் உள்ளன. 25 ஏக்கர் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 213.55 கோடி செலவாகும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் கட்டப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இது உயர்நிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி வசதி ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இந்நிறுவனம், 200 படுக்கைகள் கொண்ட வெளிநோயாளிகள் பிரிவு, சிகிச்சை பிரிவு, கல்வி வளாகம், விடுதி மற்றும் உண்டு உறைவிடப் பிரிவு மற்றும் யோகா பிரிவு மற்றும் உணவு வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 19 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஜஜ்ஜார் (ஹரியானா)

புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் மற்றும் ஜஜ்ஜாரில் உள்ள தேவர்கானா கிராமத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை பாரம்பரிய சுகாதார அமைப்புகள் மூலம் முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த நிறுவனங்கள் வளர்ந்து வரும் சுகாதார சவால்களை, குறிப்பாக வளர்ந்து வரும் தொற்றா நோய்களின் பரவலைத் தடுக்கவும் தீர்க்கவும் ஹைட்ரோதெரபி, மசாஜ், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் யோகா சிகிச்சை போன்ற பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றன.

அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்களுடன், இந்த நிறுவனங்கள் தனிநபர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்.

*******

AD/BS/DL



(Release ID: 2008679) Visitor Counter : 57