உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை ஒடுக்க சிறந்த உத்தியைப் பின்பற்றி வருகிறது- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளும் உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளன- திரு அமித்ஷா

Posted On: 23 FEB 2024 7:10PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பயங்கரவாதத்தை ஒடுக்க சிறந்த உத்திகளைப் பின்பற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் இதனைத் தெரிவித்துள்ளார். போதுமான சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நக்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் இதயங்களை மோடி அரசு வென்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொள்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் அதன் பலத்தை இழந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார். நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முழுமையான அணுகுமுறையுடன் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2014-ம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 52 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 69 சதவீதமும் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 2004-2014-ம் ஆண்டு காலகட்டத்தில் 14,862 ஆக இருந்தது என்றும் 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய பத்து ஆண்டுகளில் அது 7,128 ஆக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 2004-14 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1,750 ஆக இருந்தது என்றும் இது 2014-2023-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 485 ஆக 72 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், வன்முறை நடந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 2010-ல் 96 ஆக இருந்தது எனவும் இது 2022-ல் 53 சதவீதம் குறைந்து 45 ஆக குறைந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

AD/PLM/KRS

Release ID: 2008492



(Release ID: 2008522) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Marathi , Gujarati