தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இமாச்சலில் இருந்து ஹரித்வாருக்கு நேரடி இரயில் சேவை மோடி அரசின் பரிசு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்
Posted On:
23 FEB 2024 7:15PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் உனாவிலிருந்து சஹரன்பூருக்கு இயக்கப்படும் ரயில் இப்போது ஹரித்வார் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று தெரிவித்தார்.
இந்த முடிவுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு திரு அனுராக் தாக்கூர் நன்றி தெரிவித்தார், இது இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் கூறினார்.
அமைச்சர் மெலும் கூறுகையில், "ஹமீர்பூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பிரதிநிதி என்ற முறையில், இந்தப் பகுதியின் வளர்ச்சியில் நான் எப்போதும் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன், இமாச்சலப் பிரதேசத்தில் சிறந்த இணைப்பு வசதிகளை வழங்குவதே எனது முன்னுரிமை. ஹரித்வார் ஒரு முக்கிய ஆன்மீக தலமாகும், மேலும் இமாச்சல பிரதேசத்திலிருந்து ஏராளமான மக்கள் புனித யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வருகை தருகிறார்கள். நான் ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயணிகள் நேரடியாக ரயிலில் ஹரித்வாருக்குச் செல்வதற்கு வசதியாக இருக்குமென்று வேண்டுகோள் வைத்தேன். உனாவிலிருந்து சஹரன்பூர் வரை இயங்கி வந்த உனா ஹிமாச்சல்-சஹரன்பூர் புறநகர் மின்சார ரயிலின் விரிவாக்கத்திற்கு ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ரயில் இப்போது உனாவிலிருந்து ஹரித்வார் வரை இயக்கப்படும், இது பயணிகளுக்கு நல்ல வசதியை வழங்குகிறது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் கூறுகையில், "வளர்ச்சி எங்கள் முன்னுரிமை, உனாவுக்கு வளர்ச்சித் திட்டங்களை வழங்குவதில் மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி இப்பகுதிக்கு நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயிலை பரிசாக வழங்கினார், அதன் துவக்க விழாவிற்கு உனாவுக்கு வருகை தந்தார். பாஜகவால்தான் இந்தியாவின் அதிநவீன ரயில் இப்போது இமாச்சல பிரதேசத்தில் இயக்கப்படுகிறது. ரயில்வே சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய ரயில்களை இயக்குவது முதல் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது வரை இமாச்சல பிரதேசத்தில் எந்தவொரு இணைப்பு சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கும் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் ரயில்வே விரிவாக்கத்திற்காக 1838 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பானுபாலி-பிலாஸ்பூர்-பெரி ரயில் பாதைக்காக 1000 கோடி ரூபாயும், சண்டிகர்-பாடி ரயில் பாதைக்கு 450 கோடி ரூபாயும், நங்கல்-தல்வாரா ரயில் பாதைக்கு 452 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே விரிவாக்கத்திற்காக 1838 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது, 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதை விட 17 மடங்கு அதிகமாகும். தற்போது, மாநிலத்தில் 19,556 கோடி ரூபாய் முதலீட்டில் 258 கிலோமீட்டர் பரப்பளவில் நான்கு திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
அமைச்சர் பேசுகையில், "எனது நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உனா மாவட்டத்தின் காக்ரெட் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. லோஹர்லி காட் மீது 500 மீட்டர் நீளமுள்ள இரட்டை வழி பாலத்திற்கான ஒப்புதல், தௌலத்பூர் சௌக் ரயில் நிலையத்தின் திறப்பு விழா, ஆம்ப் ரயில் நிலையம் வரை ரயில் பாதையை மின்மயமாக்குதல் மற்றும் நடை மேம்பாலத்தின் விரிவாக்கம், உனா ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை மற்றும் நடை மேம்பாலத்திற்கான ஒப்புதல், பழைய பாலத்தின் விரிவாக்கம், புதிய ரயில்களுக்கான ஒப்புதல், சுரு தக்ராலா அம்பாலா கன்ட்-தௌலத்பூர் சௌக் பயணிகள் சிறப்பு ரயில் மற்றும் ரைமேஹத்பூர் சஹரன்பூர்-உனா ஹிமாச்சல் பயணிகள் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களுக்கான நிறுத்தங்களுடன், இமாச்சலப் பிரதேசம் முழுவதற்கும் மோடி அரசின் குறிப்பிடத்தக்க பரிசுகளாகும்.
இமாச்சலப் பிரதேசத்தில் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்ட ஒரே மாவட்டம் உனா மாவட்டம் ஆகும். முதல் ரயில் 1990 ஆம் ஆண்டில் உனாவை அடைந்தது.
உனா-ஹமீர்பூர் ரயில் பாதை அமைப்பதற்காக இமாச்சலப் பிரதேச அரசு 1500 கோடி ரூபாயும், மத்திய அரசு 4300 கோடி ரூபாயும் பங்களிக்கும்.
"பதான்கோட் மற்றும் ஜோகிந்தர்நகர் இடையே ரயில் சேவையை மீட்டெடுப்பதை விரைவுபடுத்தும் வகையில் சக்கி ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டுவதற்கு பிப்ரவரி 17 ஆம் தேதி நான் ஒப்புதல் பெற்றேன். கூடுதலாக, காங்க்ரா மற்றும் நூர்பூர் இடையேயான ரயில் பாதையும் விரைவில் மீட்டமைக்கப்படும். இதற்கான அனுமதியைப் பெறுவதற்காக ரயில்வே அமைச்சரையும் சந்தித்துள்ளேன் என்று அனுராக் தாக்கூர் கூறினார்.
***
(Release ID: 2008494)
ANU/AD/RS/KRS
(Release ID: 2008520)
Visitor Counter : 93