வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா அவசரப்படுவதில்லை, கவனமான மற்றும் அளவிடப்பட்ட அணுகு முறையைப் பின்பற்றுகிறது: திரு பியூஷ் கோயல்
Posted On:
23 FEB 2024 4:15PM by PIB Chennai
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டில் பல ஆண்டுகளாக தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், கவனமான மற்றும் அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதாலும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிக்க அரசு அவசரப்படுவதில்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
ரைசினா உரையாடல் 2024 இல் ஒரு கலந்துரையாடலின் போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் நியாயமானவை, சமமானவை என்பதை உறுதி செய்வதற்காக தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது விரிவான பங்கெடுப்பாளர் ஆலோசனைகள், அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள 13-வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் திரு கோயல் கலந்துகொள்கிறார். இதில் உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இல்லாத பிரச்சனைகளை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்க முயற்சிகள் உள்ளன என்றும், உலக வர்த்தக அமைப்பில் வழிகாட்டும் கொள்கைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய இந்தியா முயற்சிக்கும் என்றும் கூறினார். உலக வர்த்தக அமைப்பின் கடந்த காலங்களில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், தேவையான சீர்திருத்தங்களுடன் அமைப்பை வலுப்படுத்துவதற்கு வலுவான ஆதரவை தெரிவித்தார். நியாயமான மற்றும் வலுவான பலதரப்பு வர்த்தக முறைக்கு உலக வர்த்தக அமைப்பு முக்கியமானது என்று திரு கோயல் கூறினார்.
கார்பன் எல்லைகளை சரிசெய்யும் முறைகளின் பிரச்சனை குறித்து பேசிய திரு கோயல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி விதிப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்றும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இந்த பிரச்சனையை எடுத்துக் கொள்ளும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருதரப்பு பிரச்சனையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், அரசு சவால்களை உணர்ந்திருப்பதாகவும், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படும் என்றும் அமைச்சர் பங்கெடுப்பாளர்களுக்கு உறுதியளித்தார்.
உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளைத் தழுவி தற்சார்புடையதாக மாறுவதன் மூலம் உலகத்துடன் ஈடுபடவும், போட்டியிடவும் இந்தியா தயாராக உள்ளது என்று திரு கோயல் குறிப்பிட்டார். பெரிய உள்நாட்டு சந்தையும், நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான திறனும் இந்தியாவை முதலீடுகளுக்கான சிறந்த இடமாக மாற்றும் என்று அவர் கூறினார். வலுவான பெரும் பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதை உறுதி செய்வதற்காக, பொருளாதாரத்தை சீர்திருத்தி, மாற்றியமைக்க அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார். நலத்திட்டங்களின் நோக்கம் கடைகோடி வரை உள்ள பயனாளிகளை சென்றடைவதாக திரு கோயல் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு போன்ற பொது நலனுக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திரு கோயல் கூறினார். மேக் இன் இந்தியா, புத்தொழில் இந்தியா டிஜிட்டல் இந்தியா, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் போன்ற பல்வேறு முன்முயற்சிகள் இந்தியாவை வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளதை அமைச்சர் மேற்கோள் காட்டினார். இந்த முயற்சிகள் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தியில் தனியார் மற்றும் பொது முதலீட்டை ஊக்குவிக்கின்றன. இது 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்ற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2008382)
ANU/PKV/BS/RS/KRS
(Release ID: 2008477)
Visitor Counter : 78