நிலக்கரி அமைச்சகம்

சத்தீஸ்கரில் தென்கிழக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 23 FEB 2024 11:36AM by PIB Chennai

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி சத்தீஸ்கரில் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள கோல் இந்தியா துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி வயல் (எஸ்இசிஎல்) நிறுவனத்தின் மூன்று முக்கியமான இணைப்புத் திட்டங்களை நாளை காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். ரூ.600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்தத் திட்டங்கள், விரைவான, சுற்றுச்சூழலுக்கேற்ற மற்றும் திறன்வாய்ந்த இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கான குறிப்பிடத்தக்க முன்னெடுப்பைக் குறிக்கின்றன.

டிப்கா பகுதியில் அமைந்துள்ள டிப்கா ஓ.சி.பி நிலக்கரி கையாளுதல் ஆலையில், ரூ.211 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஒரு முக்கியத் திட்டமாக உள்ளது. ஆண்டுக்கு 25 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளும் திறனுடன், இந்தத் திட்டம் 20,000 டன் நிலத்தடி பதுங்கு குழி திறன் மற்றும் 2.1 கிமீ நீளமுள்ள கன்வேயர் பெல்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது ஒரு மணி நேரத்திற்கு 4,500 - 8,500 டன் நிலக்கரியை விரைவாகக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. மேலும், இந்தத் திட்டம் சுரங்கம் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு இடையே சாலை அடிப்படையிலான நிலக்கரி போக்குவரத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்தை உறுதி செய்யும். இதன் மூலம் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், நிலக்கரி ஏற்றும்  நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக கணிசமாகக் குறைப்பதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம் எஸ்.இ.சி.எல்-இன் ராய்கர் பகுதியில் உள்ள சால் ஓ.சி.பி நிலக்கரி கையாளும் ஆலை ஆகும். இது 173 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாளும் திறன் கொண்ட இதில் நிலத்தடி பதுங்கு குழி, 1.7 கி.மீ நீளமுள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் 3,000 டன் திறன் கொண்ட சைலோ ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, எஸ்.இ.சி.எல் ராய்கர் பகுதியில் உள்ள பரோட் ஓ.சி.பி நிலக்கரி கையாளும் ஆலை, ஆண்டுக்கு 10 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரூ.216 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. 20,000 டன் நிலத்தடி பதுங்கு குழி திறன் மற்றும் 1.7 கிமீ கன்வேயர் பெல்ட் ஆகியவற்றைக் கொண்ட இந்தத் திட்டம் ஒரு மணி நேரத்திற்கு 5000 முதல் 7500 டன் வரையிலான நிலக்கரியை ஏற்றும் திறன் கொண்ட விரைவான ஏற்றுதல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஏற்றுதல் செயல்முறையைக் கணிசமாக நெறிப்படுத்துகிறது.

பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்துடன் இணைந்து, இந்தத் திட்டங்கள் இந்தப் பிராந்தியம் முழுவதும் பல மாதிரி இணைப்பை வழங்குவதற்கும், நிலக்கரி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன. உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், திறமையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதன் மூலமும், அவை இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் கொள்கைகளை மேற்கொண்டு, கடைசி இடம் வரை இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதுடன் நிலக்கரி போக்குவரத்துக்காக சாலையை மட்டுமே நம்பியிருப்பதைக் குறைக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறைகிறது.

***

ANU/PKV/BS/RS/KV



(Release ID: 2008335) Visitor Counter : 60