ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கான வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 22 FEB 2024 5:58PM by PIB Chennai

மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் துறைசார்ந்த வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். தேசிய முன்னுரிமைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மக்களை மையப்படுத்துதல் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு மனிதவளத்தின் திறன் மேம்பாடு மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஆண்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள், ரயில்வே, பி.எஸ்.என்.எல் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் “ஐகோட் கர்மயோகி” பயிற்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  மேலும் இது அவர்களின் திறன்களை வளர்க்கவும், அவர்களின் வேலையை நோக்கிய ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும், அவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அரசின் சேவைகளை மக்களுக்கு சிறந்த முறையில் வழங்குவதற்கான திறனை மேம்படுத்தவும் உதவியது.

ரயில் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே, அஞ்சல், பொது சேவை மையங்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

ரயில்வே, அஞ்சல், சி.எஸ்.சி அல்லது பி.எஸ்.என்.எல் என எதுவாக இருந்தாலும், அனைத்தும் சேவை தொடர்பான துறைகள் மற்றும் சேவைத் தொழில்களுக்கு வேறுபட்ட மனநிலை தேவைப்படுகிறது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்கெடுப்பாளர்களுடனான தொடர்ச்சியானத் தொடர்பு வாடிக்கையாளர்கள் மற்றும் முழுக் கட்டமைப்பிலும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் "மனம் ஒரு பிரச்சனை அல்ல, மனநிலை இருக்கவேண்டும்" என்று கூறுவார்.  எனவே நமது மனநிலையை தீர்வு சார்ந்ததாக மாற்ற வேண்டும். பிரச்சனைகள் அனைவராலும் எதிர்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த சிக்கல்களுக்கு நாம் எவ்வாறு தீர்வுகளைக் கண்டறிவது என்பது முக்கியம். இது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வித்தியாசத்தை உருவாக்குகிறது. நமது எண்ணங்கள் நமது செயலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த செயல்கள் நமது நடைமுறையை உருவாக்குகின்றன".

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ், நான்கு துறைகளிலும் பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நம்மிடம் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஏனெனில் அவை வளர்ந்த தேசத்திற்கான அடித்தளத்தை அமைக்கும். நாம் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். நமது செயல்திறனில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது. எப்போதும் உயர்ந்த குறிக்கோளை நோக்கி செயல்பட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் நாம் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை  உருவாக்க வேண்டும். இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

***

(Release ID: 2008109)
ANU/PKV/BS/RS/KRS


(रिलीज़ आईडी: 2008162) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi