சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரளாவில் மனித வனவிலங்கு மோதல் நிலைமை குறித்து திரு பூபேந்தர் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்

Posted On: 22 FEB 2024 2:26PM by PIB Chennai

சமீப காலமாக கேரள மாநிலத்தில், குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் மனித வன உயிரின மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், கர்நாடகாவில் பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் கேரளாவின் வயநாடு ஆகியவற்றிற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடன் 2024 பிப்ரவரி 21-22 ஆகிய தேதிகளில் களப் பயணம் மேற்கொண்டார்.

2024 பிப்ரவரி 22 அன்று, கல்பெட்டாவில் உள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரு யாதவ் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வனத்துறை தலைமை இயக்குநர், மத்திய வன உயிரின மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து திரு ஓ.ஆர்.கேலு, சட்டமன்ற உறுப்பினர், மனந்தவாடி, திரு ஐ.சி. பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர், சுல்தான் பத்தேரி, திரு டி.சித்திக், சட்டமன்ற உறுப்பினர், கல்பெட்டா மற்றும் வயநாடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர். திரு ஷம்ஷாத் மரக்கார் ஆகிய மக்கள் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் விரிவாக விவாதித்தார். மேலும், இக்கூட்டத்தில் கேரள அரசின் தலைமை வன உயிரினப் பாதுகாவலர், வயநாடு மாவட்ட ஆட்சியர், வயநாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கேரள வனம் மற்றும் வன உயிரினம், சுற்றுலா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, மானந்தவாடி மறைமாவட்ட ஆயர் மார் ஜோஸ் பொருன்னெடம் அவர்களும் மத்திய அமைச்சரைச் சந்தித்து மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்து விவாதித்தார்.

இந்த விரிவான விவாதங்களைத் தொடர்ந்து பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஆய்வின் அடிப்படையில் கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், மனிதவனஉயிரின மோதல்களைத் தணிக்க கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுடன் கைகொடுக்கும் மையமாக மேம்படுத்தப்படும்.

தென் மாநிலங்களுக்கிடையே வன உயிரினப் பிரச்சினைகளில் சிறந்த ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கு வழிவகை செய்யும்.

முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் மற்றும் நவீனக் கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்களப் பணியாளர்கள் மற்றும் பிற முன்னணி துறைகளின் திறன் மேம்பாட்டிற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆதரவளிக்கும்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2023-24ம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் கேரள மாநிலத்திற்கு ரூ.15.82 கோடியை அனுமதித்துள்ளது. மாநில அரசால் முன்மொழியப்பட்ட கோரிக்கை, வருடாந்திர செயல்முறைத் திட்டத்தின் அடிப்படையில், யானைகளைத் தடுக்க சுவர்கள் கட்டுதல் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான கேம்பா மற்றும் இதரத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சாலை மேலாண்மைத் திட்டம் தயாரிக்க மத்திய அரசு, இந்திய வன உயிரின நிறுவனம் மூலமாக உதவி செய்யும்.

குறிப்பிட்ட இடங்களில் யானை புகா வேலிகள் அமைக்கலாம். மாநில அரசு, காம்பா திட்டம் மற்றும் இதரத் திட்டங்களின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி கோரலாம்.

மத்திய அரசு மனித இறப்புகளுக்கான கருணைத் தொகையை ரூ .5.0 லட்சத்திலிருந்து ரூ .10.0 லட்சமாக உயர்த்தியுள்ளது. கருணைத் தொகையை மாநில அரசு உடனடியாகவும், வெளிப்படையான முறையிலும் வழங்க வேண்டும். வெளிப்படையான முறையில் பொருத்தமான வழிமுறை மற்றும் நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.

மனித வன உயிரின மோதல்களைத் தணிப்பதற்காக வன உயிரினங்களைப் பிடிப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் அல்லது வேட்டையாடுவதற்கும் அனுமதி அளிப்பது தொடர்பாக, 1972 ஆம் ஆண்டின் வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 11, மனித வன உயிரின மோதல்களை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநிலத்தின் மாநில தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2008000)

ANU/PKV/BS/RS/KRS


(Release ID: 2008108) Visitor Counter : 130