வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2047-ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
19 FEB 2024 4:34PM by PIB Chennai
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே தற்போதைய அரசின் லட்சியம் என்றும் அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார். புதுதில்லியில் இன்று 19 லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளைச் சேர்ந்த 35 பத்திரிகையாளர்கள் அடங்கிய ஊடகக் குழுவினரிடையே உரையாற்றிய திரு கோயல், தற்போதைய 3.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை 2047-ம் ஆண்டுக்குள் 30- முதல், 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதும், நாட்டின் உணவு, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் லட்சியம் என்று கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் நல்ல ஆளுமையுடன் ஏழைகளின் நலன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முழுமையான தொலைநோக்குப் பார்வை, இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5-வது பெரிய பொருளாதாரமாக மாற உதவியது என்றும், 2027-ம் ஆண்டில் 3-வது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியாக உருவெடுக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
அந்நியச் செலாவணி கையிருப்பில் 2014-ம் ஆண்டு முதல் 4-வது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், வளரும் நாடுகளின் நாணய மதிப்பில் இந்தியா சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்றாகும் என்றும் திரு கோயல் கூறினார். சுதந்திரம் பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் பணவீக்கம் பாதியாகக் குறைந்துள்ளதால், வட்டி விகிதங்கள் கட்டுக்குள் இருப்பதால் பொருளாதாரத்திற்கு பயனளித்து, கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த செயல்திறனைக் கண்டுள்ளது என்று திரு கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2007105
***
ANU/AD/IR/AG/DL
(Release ID: 2007177)
Visitor Counter : 145