தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரதம்@2047 தொலைநோக்கு : நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை இயக்கும் இளைஞர்கள் சுறுசுறுப்பாக இருங்கள், வாய்ப்புகளில் செயல்படுங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுங்கள்; அனுராக் தாக்கூர்
Posted On:
17 FEB 2024 2:57PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஐஎம்சி-இளம் தலைவர்கள் அமைப்பின் இளைஞர் மாநாட்டின் 4 வது பதிப்பை இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தொடக்க அமர்வின் போது பார்வையாளர்களிடையே உரையாற்றிய அவர், நாடு 100-வது சுதந்திரத்தின் விளிம்பில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு இந்தியாவை எதிர்காலத்தில் சாத்தியமுள்ள ஒரு வல்லரசாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கும் 'வளர்ச்சியடைந்த பாரதம் @2047 தொலைநோக்கு ' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார் .
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் தாக்கூர், "இளைஞர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை இயக்குபவர்கள், சுறுசுறுப்பாக இருங்கள், வாய்ப்புகளில் செயல்படுங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் வளர்ச்சியில், இளைஞர்களின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு 2023 இன் படி, 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 41% ஆக உள்ள 547 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவின் இணையற்ற திறனைப் பற்றிக் குறிப்பிட்டார்.
1.4 பில்லியன் இந்தியர்களில், சுமார் 100 கோடி பேர் இன்று 35 வயதுக்குட்பட்டவர்கள். 2047 ஆம் ஆண்டில், உலகளாவிய பணியாளர்களில் 21% பேர் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் எதிர்காலத்தின் சிற்பிகள் மட்டுமல்ல, நாட்டின் விருப்பங்கள், கொள்கைகள் மற்றும் விதியின் பாதுகாவலர்களும்தான் என்று திரு தாக்கூர் வலியுறுத்தினார்.
'வளர்ச்சியடைந்த பாரதம் 2024' பற்றி விவாதித்த அமைச்சர், இணையத்தில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியாவின் நிலையை குறிப்பிட்டார், ஒவ்வொரு நிமிடமும் மூன்று இந்தியர்கள் இதில் இணைகின்றனர், அவர்களில் இருவர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 2024-ம் ஆண்டுக்குள் உலகின் நடுத்தர வர்க்கத்தினரில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் வசிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறிய திரு தாக்கூர், இளம் தொழில்முனைவோர் வீட்டுவசதி, கல்வி, உள்கட்டமைப்பு, குடிநீர், உணவு, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் புதுமைகளை புகுத்தி சாதகமாக அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை 17 ஆயிரம் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் 1.3 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவற்றில், 55,816 நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார், இது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டில், நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவிற்காக இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 2023 அக்டோபர் 31 அன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'எனது இளம் இந்தியா' தளத்தையும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் உள்ளடக்க மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பை திரு அனுராக் சிங் தாக்கூர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் உயர்ந்த மனித வளம், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் உற்பத்திக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஊக்கத்தொகைகள் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். ஓடிடி தளத்தில் 28% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன், இந்திய இளைஞர்கள் நாட்டின் நாகரிக வலிமையை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளனர். அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்கவும், இந்திய திரைப்படத் துறையில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பைத் தடுக்கவும் ஒளிப்பதிவு (திருத்தம்) சட்டம், 2023 கொண்டுவரப்பட்டதை அமைச்சர் எடுத்துரைத்தார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்ட இந்த மாநாடு, நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாக செயல்பட்டது.
*******
ANU/PKV/BS/DL
(Release ID: 2006816)
Visitor Counter : 72