ரெயில்வே அமைச்சகம்
2024, ஜனவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 549-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர்
Posted On:
16 FEB 2024 1:54PM by PIB Chennai
2024 ஜனவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 549-க்கும் அதிகமான குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
ரயில்வே சொத்து, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை 2024 ஜனவரி மாதத்தில், குழந்தை செல்வங்கள் மீட்பு எனும் நடவடிக்கை மூலம், பெற்றோர்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீட்டதுடன், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 549-க்கும் அதிகமான குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதில் ஆர்பிஎஃப் முக்கியப் பங்கு வகித்தது. இந்தக் குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து விட்டனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய ஆர்.பி.எஃப் அயராது உழைத்தது.
"உயிர்களைக் காப்பது" என்ற நடவடிக்கையின் கீழ், நடைமேடைகள் மற்றும் ரயில் தடங்களில் சக்கரங்களுக்கு அடியில் பயணிகள் சிக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓடும் ரயில்களில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 233 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
"பெண்கள் பாதுகாப்பு" முன்முயற்சியின் கீழ், 2024 ஜனவரி மாதத்தில் 229 "பெண்கள் பாதுகாப்பு" குழுக்கள் 13,615 ரயில்களில் 4.1 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கின. பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 4.1 லட்சம் பேர் மீது ஆர்.பி.எஃப் சட்ட நடவடிக்கை எடுத்தது.
தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையில், 2024 ஜனவரி மாதத்தில் 379 நபர்களை ஆர்.பி.எஃப் கைது செய்து சட்டப்படி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது. மேலும், ரூ.44.46 லட்சம் மதிப்புள்ள ரயில்வே டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2006530
***
ANU/SMB/BS/RS/KV
(Release ID: 2006628)
Visitor Counter : 141