பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கத்தார் அமீரின் தந்தையுடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 15 FEB 2024 5:57PM by PIB Chennai

தோஹாவில் கத்தார் அமீரின் தந்தை (Father Amir) திரு ஹமத் பின் கலிபா அல் தானியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிற்பகல் சந்தித்தார்.

கடந்த பத்தாண்டுகளாக கத்தாரின் வளர்ச்சிக்கு வழிவகுத்த தொலைநோக்குடன் கூடிய, தலைமைப் பண்புமிக்க கத்தார் அமீரின் தந்தைக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியா-கத்தார் இடையேயான உறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

 

பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அமீரின் தந்தையின் உள்ளார்ந்த கருத்துக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

 

இந்தியாவும் கத்தாரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அசைக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொள்வதாக அமீரின் தந்தை கூறினார். கத்தாரின் வளர்ச்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

***

(Release ID: 2006342)

ANU/MS/PLM/AG/KRS

 


(रिलीज़ आईडी: 2006373) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam